யாழில் ஜேர்மனியிலிருந்து வந்த 50 வயதான மனைவியின் சித்தியுடன் கணவர் 5 வயது மகனையும் சேர்த்து ஊர் சுற்றுவதாக மனைவி பொலிசில் புகார்!!
ஜேர்மனியிலிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன் வந்த தனது தாயின் சகோதரியுடன் தனது கணவர் தனது 5 வயது மகனையும் சேர்த்து கொண்டு ஊர் சுற்றித் திரிவதாகவும் தனது மகனையும் கணவனையும் சித்தியிடமிருந்து மீட்டுத்தருமாறு யாழில் பெண் ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். ஹயஸ் வாகனம் வைத்திருக்கும் தனது கணவர் கடந்த யூன் மாத முற்பகுதியில் ஜேர்மனியிலிருந்து வந்த தனது தாயின் சகோதரியை கட்டுநாயக்காவிலிருந்து ஏற்றி யாழ்ப்பாணம் வந்தார் எனவும் அதன் பின்னர் வீடு வந்த கணவர் தனது இரண்டாவது மகனையும் அழைத்துக் கொண்டு சித்தியுடன் கொழும்பு சென்று திரும்புதாக கூறிச் சென்றவர் இன்னும் வீடு வரவில்லை எனவும் மனைவி முறைப்பாடு செய்துள்ளார், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணவரை பல முறை வீடு வருமாறு அழைத்தும் கணவர் வீடு வராது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தனது சித்தியும் தன்னை தரக்குறைவாக ஏசுவதாகவும் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். கணவனை இழந்து ஜேர்மனியில் பிள்ளைகளுடன் வாழும் தனது சித்தி தொர்பாக பிள்ளைகளுக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவிதமான பலனும் இல்லை எனவும் முறையிட்டுள்ளார். தனது 2 வது மகனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என்றும் மகனுக்கு பாடசாலை அனுமதி நேர்முகப் பரீட்சை இருப்பதாலும் உடனடியாக மகனை வீட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்,
