புதினங்களின் சங்கமம்

யாழில் பாழடைந்த வீட்டுக்குள் போதைப் பொருள் பாவித்த 2 யுவதிகள்!! கலைத்துப் பிடித்த பொலிசார்!!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த
வீடொன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

25 மற்றும் 39 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் சங்கானை பகுதியை சேர்ந்தவர்கள். கணவர்கள் பிரிந்து சென்ற பின்னர் தனித்து வாழ்ந்து வருபவர்கள்.

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.