கனடாவில் மிக ஆபத்தானவர் என தேடப்படும் இலங்கைத் தமிழரான சதீஸ்குமார்!
வன்முறையில் ஈடுபடுபவர், ஆபத்தானவர்” என்று வர்ணிக்கப்படும் 34 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவரை கனடா முழுவதும் பொலிசார் தேடி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை காலை 11:40 மணியளவில் ரொரன்டோவின் க்ளென் எவரெஸ்ட் ரோட் மற்றும் கிங்ஸ்டன் ரோட் பகுதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர் தேடப்படுகிறார்.
இவரால் கத்தியால் குத்தப்பட்ட38 வயதான லியோன் டைரெல் என்பவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் உயிரிழந்தார்.
ரொறன்ரோவின் இந்த ஆண்டின் கொல்லப்பட்ட 43வது நபர் லியோன் டைரெல் ஆவார்.
<
இரண்டாம் நிலை கொலைக்காக தேடப்பட்டு வரும் “ரியான்” என அழைக்கப்படும்சதீஸ்குமார் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சதீஷ்குமார் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுவதாகவும் அவர் வன்முறையாகவும் ஆபத்தானவராகவும் கருதப்படுகிறார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் காவல்துறை அல்லது குற்றத் தடுப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

