புதினங்களின் சங்கமம்

யாழில் வங்கி ஒன்றின் திருவிளையாடல்!!

NDB வங்கியின் Credit Cardஐ பயன்படுத்தி வந்தேன். கார்டு ஜூன் 2022 இல் காலாவதியானது. 30 ஜூன் வங்கியில் இருந்து ஒரு குருஞ் செய்தி கிடைக்க பெற்றேன்.
குருஞ் செய்தி: ‘பெட்ரோல் இல்லாத காரணத்தால் புதிய கார்டை விநியோகம் செய்யமுடியாமல் உள்ளது. அவசரமாக தேவைப்படின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். கார்டை அருகில் உள்ள NDB கிளையில் நீங்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.’
தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டேன். உடனே அனுப்பி வைப்பதாக கூறினார்கள்.
ஜூலை 2ஆம் கிழமை – கார்டு எனக்கு அவசரமாக தேவைப்பட்டது. NDB வலைத்தளம் 3மணி வரை திறந்து இருப்பதாக கூறியது. 2:15க்கு சென்றேன். NDB Jaffna மூடி இருந்தது. Security உடன் கதைத்தேன். அவர் உள்ளே சென்று ஒரு உத்தியோகத்தரை அழைத்து வந்தார். கார்டு வரவில்லை என்று கூறினார்.
ஆகஸ்ட் 8 என்று நினைக்கின்றேன். திரும்பவும் அவசரமாக கார்டு தேவைப்பட்டது. NDB க்கு call எடுத்தேன். Answer இல்லை. மறுபடியும் NDB வலைத்தளம் 3மணி வரை திறந்து இருப்பதாக கூறியது. 2:10க்கு சென்றேன். மூடி இருந்தது. Security உடன் கதைத்தேன். அவர் உள்ளே சென்று ஒரு உத்தியோகத்தரை அழைத்து வந்தார். கார்டு வரவில்லை என்று கூறினார். மிகவும் ஏமாற்றம் அடைந்த நான் கார்டு எனக்கு வேண்டாம் – அதை cancel செய்யுமாறு கேட்டேன். தயங்கினார். நானோ உறுதியாக நின்றேன். அவசரத்துக்கு உதவாத கார்டும் சரியான தகவலை தரமுடியாத வங்கியும் ஒரு பயனும் இல்லை. உள்ளே அழைத்து சென்றார். தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டார். ‘கார்டை அனுப்பிவிட்டார்களாம். ஒரு கிழமைக்குள் வரும். Cancel செய்யாதீர்கள் என்றார். சம்மதித்தேன். அவரது கைபேசி இலக்கத்தை வாங்கி வீடு வந்தேன்.
15 ஆகஸ்ட் அவரை தொடர்புகொண்டேன். நிலைமையை அறிந்து சொல்வதாக கூறினார். சொல்ல வில்லை!
22 ஆகஸ்ட் மீண்டும் தொடர்புகொண்டேன். பதிலளிக்கவில்லை.
23 ஆகஸ்ட் (இன்று) காலையில் தொடர்புகொண்டேன். பதிலளிக்கவில்லை.
இத்தகைய சேவையை ஒரு வங்கி வழங்குகிறதா? 2 மாதங்களின் பின்னர் கூட பெட்ரோல் பிரச்சனையால் கார்டை அனுப்பி வைக்க முடியாமல் உள்ளதா? பெட்ரோல் பிரச்சனை? பெட்ரோல் பிரச்சனை என்று சொல்லும் அளவிற்கு பெட்ரோல் ஒரு பிரச்சனையாக இப்பொழுது இல்லை! இவை நொண்டி சாட்டுகள் என்றே கூறவேண்டும்.
கார்டை தருகிறார்கள் இல்லை. Cancel செய்ய விடுகிறார்கள் இல்லை. கை பேசியில் கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள் இல்லை. Website இல் இருக்கும் நேரத்திற்கமைய மூடுகிறார்கள் இல்லை. ஆனால் கார்டின் கமிஷன், Late Fees, Excess Fees மற்றும் வருடாந்த சந்தாவை கரெக்ட்டா எடுக்கிறார்கள்! 1 நாள் கூட தாமதமின்றி, 1/= கூட குறையாது எடுக்கிறார்கள்!!
இன்று முதல் NDB வங்கிக்கு ஒரு முற்றுப்புள்ளி!!