வவுனியாவில் கோர விபத்து!! இளைஞன் பலி!! 4 பேர் படுகாயம்!! (Video)
வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் விபத்தில் சிக்கி வவுனியா இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து நேற்றைய தினம் விமான நிலையத்திற்கு சென்று மீண்டும் வவுனியா நோக்கி பயணிகள் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது நொச்சியாகம பாலத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக வாகனத்தில் இருந்த வவுனியா தவசிகுளத்தினை சேர்ந்த 23 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் பயணித்த மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.