புதினங்களின் சங்கமம்

இலங்கையிலுள்ள பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் காலாவதியான முகப்பூச்சுக்களை (கிறீம்) விற்பனை செய்த இருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் அழகு கலை நிலையம், கிறீம் விற்பனை நிலையம் ஒன்று நடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை ஜுன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலவதியான கிறீம்களில் திகதிகள் மாற்றப்பட்டு நாடு முழுவதும் விற்பனை செய்து வந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்குருகாரமுள்ள பகுதியில் நேற்று நீர்க்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களின் வீட்டை சோதனை செய்த பொலிஸார் அங்கிருந்து காலாவதியான கிறீம்கள், அழகு சாதன பொருட்கள் , அவற்றை பொதி செய்ய பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

காலாவதியான கிறீம்களை கொள்வனவு செய்து அவற்றை புதிய பெட்டிகளுக்குள் அடைத்து , அதன் காலாவதி தினங்களையும் மாற்றி வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய அழகு சாதனப் பொருட்களாக விநியோகம் செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழகினை ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்தும் கிறீம்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சானர் ருவன் குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.