அப்பு…. ராசா.. மகேசா..பெற்றோல் செற்றில வேலை செய்யிற பெடியலிட சீதனத்தையும் உயர்த்திற வேலை பாத்திட்டாய் மகேசா.

அப்பு…. ராசா.. மகேசா… நீ முதல் றோஸ்காட், புளு காட், … வைட் காட்… என கலர் கலரா காட் கொடுத்து அது பெயிலியர் ஆகிட்டு…. இனி ஆம்பிளை லைன், பெண்பிள்ளை லைன், அரச ஊழியர் லைன் என்டு திருப்ப தொடங்கிறியோ?….. உன்னான நான் சொல்லுறதை கேளு…. பெற்றோல் எந்த எந்த செற்றுகளில் எப்ப எப்ப அடிக்கப் போறாங்கள் என்டு தகவலை நீ ஏன் முதலே கொடுக்கிறாய்??…. பெற்றோல் செற்களுக்கு பெற்றோல் வாறதிற்கு ஒரு மணி நேரத்திற்கு முதல் தகவலை ஊடகங்களுக்கு வழங்கு…. ஒருத்தரும் முதல்நாள் கொண்டு வந்து மோட்டச்சயிக்கிள்களை… ஓட்டோக்களை அடுக்க மாட்டினம்… பெற்றோல் செற்காரங்களுக்கு இலவச விளம்பரமோ செய்யுறாய்… 6600 லீற்றர் முழுவதையும் ஒரே நாளில் அவன் விற்றால் அவனுக்கு 1லட்சத்து 30 ஆயிரம் ரூபா கொமிசன் என பலரும் கதைக்கிறாங்கள்…. இது உண்மையோ தெரியாது…. பெற்றோல் செற்காரங்களிட்ட எங்கட காசையும் கொடுத்து எங்கட மானம் மரியாதை எல்லாத்தையும் இழந்து கடைசில பெற்றோல் செற்றில வேலை செய்யிற பெடியலிட சீதனத்தையும் உயர்த்திற வேலை பாத்திட்டாய் மகேசா….. உண்மையில் நீ யார்????

 

வம்பன்

error

Enjoy this blog? Please spread the word :)