புதினங்களின் சங்கமம்

யாழில் விதானையின் பிறந்தநாளுக்கு பரிசாக பெற்றோல் கொடுத்த கிராமமக்கள்!! (Photo)

கிராம சேவகரின் பிறந்த நாள் பரிசாக பெற்றோல் வழங்கிய கிராம மக்களின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தேவையறிந்த இளைஞர்களின் இப்பரிசு காலத்திற்கு பொருத்தமானது எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

J/363 கிராம சேவகர் ரதீசன் அவர்களின் பிறந்த நாள் நேற்று நடைபெற்றது. அவர் கடமைபுரியும் கிராம அலுவலக இளைஞர்களால் நாட்டில் அனைவரினதும் அத்தியாவசிய தேவையாக பெற்றோல் உள்ளது. அவரின் சேவையை இடையூறின்றி நடாத்த காலத்தின் தேவையறிந்து பெற்றோல் வழங்கியுள்ளனர்.