எரிபொருள் தட்டுப்பாடு பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்று வேளை உணவுக்கு பணத்தை தேடினால் தான் வாழ முடியும் என்ற ரீதியில் மீனவ சமூகம் தமது கடின மனித உழைப்பினால் தமது வாழ்வாதாரத்தை தேடும் பூநகரி பிரதேச மீனவர்கள்
பூநகரி பள்ளிக்குடா மீனவர்கள் எரிபொருள் இன்றிய நிலையில் பாய் மரம் கட்டி தமது வாழ்வாதாரத்திற்காக தொழில் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.பாய் மரம் என்பது காற்று வீசும் திசையை நோக்கி தொழில் செய்யும் பண்டைய முறை இது மிகவும் கடினமானது. காற்றை எதிர்த்து செல்வது கடினம் திரும்பி கரை வரும் போது காற்று திசையை நோக்கி வர முடியும் தொழிலுக்கு சென்றால் தான் மூன்று வேளை உணவு என்ற நிலையில் ஒரு சில தொழிலாளர்கள் இவ்வாறு தொழில் செய்ய செல்கின்றனர்.ஏனையவர்கள் தொழிலுக்கு செல்லாது கரைகளிலே படகுகள் காணப்படுகிறது.





