இலங்கை வருகிறது 7,500 மெற்றிக் தொன் டீசல் – அரச தரப்பிலிருந்து தகவல் கசிவு
தற்போதைய நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக சமாளிக்கும் பொருட்டு லங்கா IOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானிதுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணப்பரிமாற்றம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளிடம் இருந்தும் எரிபொருளை பெற்றுக் கொள்வது பற்றிய பேச்சுவார்த்தைகளும், உலக நாடுகளுக்கான பயணங்களும் அதிகரித்துள்ளன. இருந்தும் எவரிடம் இருந்தும் சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் ரஷ்ய அரச தலைவர் புடினுடன் கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு எரிபொருள் குறித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில், நெருக்கடி நிலையை சரி செய்ய யூலை 10 ம் திகதி வரை எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

