இலங்கைரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருட வதிவிட விசா!! தம்மிக பெரேரா
இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வதிவிட விசா 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்படுகிறது. இது 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிமை வரை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரமபிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

