புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் ஒரு லீற்றர் பெற்றோல் 1500 ரூபாவுக்கு வாங்கி 21 வயது யுவதியுடன் பிரபல விடுதியில் 50 வயத கனடா அங்கிள் லீலை!!

யாழில் உள்ள பிரபல விடுதி அறை ஒன்றில் 21 வயது யுவதி மற்றும் கனடாவில் இருந்து வந்திருந்த 50 வயது நபரும் யுவதியின் உறவினர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதியின் அயல் வீட்டுக்காரனின் சகோதரரான 50 வயதான குடும்பஸ்தர் கடந்த சில வாரங்களுக்கு முன் கனடாவில் இருந்து தனது சகோதரன் வீட்டில் தங்கியிருந்துள்ளார். தனது சகோதரனின் மோட்டார் சைக்கிளை பாவித்து வந்த குறித்த கனடா அங்கிள் தற்போது ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டால் மிகவும் திண்டாடியுள்ளார். அயவ் வீட்டில், வாடகைக்கு குடியிருந்த அரச உத்தியோகத்தரான குடும்பஸ்தர் ஒருவருடன் பெற்றோர் இல்லாத திருமணமாகாத அவரது 21 வயதான சகோதரியும் வசித்து வந்துள்ளார். குடும்பஸ்தரின் மனைவியும் அரச உத்தியோகத்தராவார்.பல்கலைக்கழகம் அல்லாத அரச கல்வி நிறுவனம் ஒன்றில் உயர்கல்வி கற்றுவந்த குறித்த யுவதி தொடர்ச்சியாக வரிசையில் நின்று பெற்றோல் சேகரித்து வந்ததை அறிந்த கனடா அங்கிள் யுவதியிடம் ஒரு லீற்றா 1500 ரூபாபடி கொடுத்து பெற்றோல் வாங்கிப் பாவித்து வந்துள்ளார். இதன் போதே குறித்த யுவதியுடன் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. விலை கூடிய ஆடைகள் மற்றும் விதம் விதமான அணிகலன்கள் மேக்கப் பொருட்கள் யுவதியின் அறையில் திடீரென முளைக்கத் தொடங்கியதை அவதானித்து யுவதியின் போக்கில் திடீரென மாற்றம் ஏற்பட்டதை அறிந்த குடும்பஸ்தரின் மனைவியான யுவதியின் அண்ணி இது தொடர்பாக தனது கணவனை எச்சரி்த்துள்ளார். அண்ணியின் மோட்டார் சைக்கிளை பாவித்தே யுவுதி பெற்றோல் சேகரித்து வந்ததுடன் தனது அண்ணன் பிள்ளைகளை பாடசாலைகளில் ஏற்றி இறக்கும் பணியையும் யுவதி செய்து வந்துள்ளார்.

இவ்வேளையில் யாழில் உள்ள முக்கிய அரச திணைக்களம் ஒன்றில் வேலை பார்த்து வந்த யுவதியின் அண்ணியின் மோட்டார் சைக்கிள் யாழ் நகரில் உள்ள பிரபல விடுதியில் காணப்படுவதாக யுவதியின் அண்ணனுக்கு அலுவலகத்தில் வேலைபார்க்கும் உத்தியோகத்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதன் பின்னரே அண்ணன் யுவதியின் நடவடிக்கையை கண்காணிக்கத் தொடங்கினார். கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆங்கில வகுப்புக்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி அதே விடுதிக்கு சென்றுள்ளார். அண்ணனுக்கு தகவல் பறந்துள்ளது. தனது மனைவியையும் கூட்டிக் கொண்டு குறித்த விடுதிக்குச் சென்ற போது அங்கு அறைக்குள் தங்கியிருந்த யுவுதி தொடர்பான விபரங்களை விடுதியில் உள்ளவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். இதன் பின்னர் அண்ணன் தனது உறவினர்களையும் அங்கு அழைத்து முரண்பட தொடங்கிய போது யுவதி தங்கியிருந்த அறையின் இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு அண்ணன் சென்ற போது கனடாவில் இருந்து வந்த அங்கிளும் தனது தங்கையும் பிடிபட்டனர். பின்னர் இருவரையும் அண்ணன் மற்றும் உறவினர்கள் தாக்கியதாகத் தெரியவருகின்றது. விடுதி முகாமையாளர் பொலிசாருக்கு தகவல் கொடுப்பதாக எச்சரித்த பின்னரே விடுதியில் இருந்து யுவதியை உறவினர்கள் இழுத்திச் சென்றதாகத் தெரியவருகின்றது. கனடா அங்கில் முகம் வீங்கிய நிலையில் அறைக்குள் தங்கியிருந்து பின்னர் விடுதி ஊழியர்களால் வைத்திய உதவியை பெற்றதாக தெரியவருகின்றது.