மன்னாரில் திருச்சொரூபங்களுக்கு நேர்ந்த கதி…!! முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலா??..!
மன்னார் மடு பொலிஸாரின் கட்டுப்பாட்டுப் பகுதியான கீரிசுட்டான் பகுதியில் கிறிஸ்தவ ஆலயத்திலுள்ள சுரூபங்கள் ஆலயத்திலிருந்து அகற்றப்பட்டதுடன் அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலுள்ள பொருட்களும் சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மடு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் சம்பவம் வெள்ளிக்கிழமை (24.05.2019) இரவு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவம்பற்றி தெரியவருவதாவது மன்னார் மடு பொலிஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கீரிச்சுட்டான் பகுதியில் கிறிஸ்துராசா ஆலயத்துக்கான கட்டுமானப்பணி நேற்று முன் தினம் வியாழக்கிழமை (24) பிற்பகல் 6 மணி வரைக்கும் நடைபெற்றதாகவும் பின்னர் பிற்பகல் ஏழு மணியளவில் ஆலய மேற்பார்வையாளர் ஆலயத்துக்குச் சென்று பார்த்தபொழுது ஆலயத்துக்குள் இருந்த கிறிஸ்துராஜா மற்றும் தேவஅன்னையின் இரு சுரூபங்களும் காணவில்லையென பங்குத் தந்தை அருட்பணி தேவராஜா (அ.ம.தி)வின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
பின் அவ் ஊர் மக்கள் இவ்விடயத்தை அறிந்து தேடுதல் நடாத்தியபோது தேவ அன்னையின் திருச்சுரூபம் ஆலய த்திலிருந்து சுமார் 75 மீற்றர் தூரத்தில் ஒரு பற்றைக்குள் வீசப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் திருச்சுரூபம் தூக்கி வீசப்பட்ட காரணத்தினால் சுரூபத்தின் தலைப்பாகம் உடைந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.-அத்துடன் கிறிஸ்து அரசர் திருச்சுரூபமானது ஆலய வளாகத்துக்குள் இரு ந்த கிணற் றுக்குள் சேதமாக்கப்பட்ட நிலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் இவ் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள கீரிசுட்டான் அரசினர் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலை யிலும் அப் பாடசாலையின் நுழைவாயில் கதவு சேதமாக்கப்பட்டதுடன் அப் பாடசாலையில் இருந்த கதிரைகள், மேசைகள்,குடிநீர் குழாய்கள் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் எல்லாம் சேதமாக்கப்பட்ட நிலையிலும் கதி ரைகள் சில சேதமாக்கப்பட்ட நிலையில் பற்றைக்குள் வீசி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டன.அப் பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கியும் கோவில் காணிக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயமாக கீரிசுட்டான் பங்குத்தந்தை அருட்பணி. தேவராஜா (அ.ம.தி) அடிகளாரும், கீரிசுட்டான் பாடசாலை அதிபர் பி.வரதராஜாவும் மடு பொலிசில் முறையீடு செய்துள்ளனர்.சம்பவ இடத்துக்குச் சென்ற மடு பொலிசார் இவ் விடயமாக தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனர்.