புதினங்களின் சங்கமம்

வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பிலான சுற்றறிக்கை வெளியானது!

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் வீடுகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் குறித்த அரச நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு நீதித்துறை நடவடிக்கைகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவே தீர்மானிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.