அமைச்சில் இருந்து வருவதாக பொய் கூறி யாழில் எரிபொருள் நிரப்பிய பிரபல சட்டத்தரணி தப்பிஓட்டம்!
அமைச்சில் இருந்து வருவதாக பொய் கூறி யாழ். நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிய பிரபல சட்டத்தரணி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
யாழ்ப்பாணம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் எரிபொருள் நிரப்புவற்கு அதிகாலை ஒரு மணியிலிருந்து நீண்ட நேரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் வாகனத்தில் வந்த நபர் ஒருவர் கொழும்பு அமைச்சில் இருந்து வருவதாக தெரிவித்து அதிகாலை ஒரு மணியிலிருந்து எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தோரின் வரிசையை மீறி எரிபொருள் நிரப்பியதால் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனால் அமைச்சில் இருந்து வருவதாக பொய் கூறி எரிபொருள் நிரப்பிய நபர் அவ்விடத்தை விட்டு நழுவிச் சென்றார்.
இதன்போது குறித்த இடத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் வாகனங்களை தவிர்த்து இடையில் வந்த வாகனத்திற்கு எவ்வாறு நீங்கள் எரிபொருள் நிரப்புவீர்கள் என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அமைச்சிலிருந்து வருவதாக தெரிவித்திருந்தார் அதனால் தான் டீசல் நிரப்பினோமென எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் அவர் வவுனியாவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி என்பது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
