அவுஸ்ரேலியாவில் யாழ்ப்பாணத்து குடும்பப் பெண்ணுக்கு நடந்த துயரம்!!
ஆஸ்திரேலியா – மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவரே அகால மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரிந்தாஸ் சுதார்சினி (வயது 36) என்று தெரியவருகிறது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண் தனது கணவருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பின்னர், தனது மூன்று வயதுக் குழந்தையோடு மெல்பேர்னுக்கு வந்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மெல்பேர்னில் தனது குடும்பத்துடன் இந்த பெண் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.
மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை விக்டோரியப் பொலிஸார் மேற்கொண்டனர்.

