புதினங்களின் சங்கமம்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிசாத்தை துாக்கிலிட வேண்டும்!!

அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

காலியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அவர் போதே இதனை தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு பாராளுமன்றத்தில் அடைக்கலம் கொடுக்க முடியாது. குற்றவாளிகள் தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு கிடையாது.

ரிஷாத் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்வது மாத்திரமல்லாமல் தூக்கிலிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கான முழு ஒத்துழைப்பையும் பாராளுமன்றத்தினூடாக பெற்றுக்கொடுப்போம்.

அத்துடன் கலவு வேலைகளுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் அரசியல் விளையாட்டுகளுக்கும் நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் பல்வேறுப்பட்ட சந்தரப்பங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

52 நாள் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்து சட்டத்துக்கு புறம்பாக புதிய பிரதமரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்கள். தற்போது அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்து அரசியல் விளையாட்டுகளை முன்னெடுத்து வருகின்றனர். அரசியல் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வை பெற்றுக்கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.