Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்திலும் மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மெசின்!! நடப்பது என்ன?

 

வடிவேலு மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மெசின் என்று ஒரு சிறிய உரலையும் உலக்கையையும் தயாரித்து விற்பனை செய்து அசத்தியது போல் ஒருவர் இங்கு 2 லட்சம் ரூபாவுக்கு இயற்கை வாயு உற்பத்தி மெசின் என ஒரு மெசினை மக்கள் தலையில் சாய்ப்பதற்கு திரிகின்றார். இயற்கை வாயு உற்பத்தி செய்யும் பொறிமுறையில் எந்தவித இயந்திரங்களும் தேவைப்படுவதில்லை.

குறித்த எரிவாயு உற்பத்தி செய்வதற்கான பொருட்களை இங்கு தந்துள்ளோம். இதை கொண்டு நீங்கள் உங்கள் அயலில் உள்ள ஒரு குழாய் பொருத்துனரைக் (பிளம்பர்) கொண்டு இதைத் தயாரித்துக் கொள்ளலாம்.

1) வாயு உற்பத்தி செய்வதற்கான கழிவுகளை நீருடன் கலந்து இடுவதற்கு வேண்டிய ஒரு சீமெந்து தொட்டி அல்லது சாதாரண தண்ணீர் தாங்கி

2) அத்துடன் வாயுவை சமையல் அறை வரை கொண்டு செல்லும் குழாய் ( காஸ் அடுப்புக்கு செல்லும் விலை கூடிய இணைப்பே தேவையில்லை. நீங்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் எடுத்து பதுக்கி வைப்பதற்கு பயன்படுத்தும் பைப்பே போதுமானது)

3) வீட்டில் இருக்கும் எரிவாயு அடுப்பு ( இதில் எரிவாயு வெளியேறும் பகுதியி்ல் உள்ள துவாரத்தை சிறிது அகலமாக்க வேண்டும்)

இதை விட உற்பத்தியாகும் வாயுவை தடுத்து நிறுத்தி வேண்டிய போது பாவிக்கும்படியான தண்ணீர் ரப் போன்றவை. ( இது குழாய் பொருத்துனருக்கு தெரியும்)

செய்முறை

இங்கு வீடியோவோக காட்டப்பட்டுள்ளது. இது கிளிநொச்சியில் 2021ம் ஆண்டு ஒரு சாதாரண விவசாயி சிறிய அளவில் செய்த வீடியோ ஆகும்.
https://www.facebook.com/watch/?ref=external&v=2999617426965976

இதையே பெரிய தாங்கி கொண்டும் செய்யலாம். ஆனால் இந்த விவசாயி செய்தது போல் வாகன ரயரிலேயோ அல்லது வேறு பைகளிலே உற்பத்தியாகும் வாயுவை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறித்த தாங்கியின் உள்ளேயே அதிக அழுத்தத்துடன் வாயு இருந்தால் அடுப்புக்கு வாயு வேகமாக வரும்.

இவ்வளவுக்குமான செலவு மற்றும் குழாய் பொருத்துனருக்கான கூலியுடன் ஆகக் கூடியது 25 ஆயிரத்துக்கும் குறைவானதாகவே தேவைப்படும்.

இவ்வளவுதான் இதின் உள்ள விடயம். இதையே மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன கருவி என கூறி 2 லட்சம் ரூபாவுக்கு விற்க திரிகின்றார் நிறுவனம் நடத்துவது என்ற போர்வையில் இயங்கும் தனிநபர். இதில் உள்ள சில நகைச்சுவை விடயம் என்னவென்றால் எந்தவித அறிவும் இல்லாத சில யூரிப் மற்றும் தங்களை ஊடகங்கள் என காட்டிக் கொண்டு திரியும் அலப்பறைகளை குறித்த நபர் நன்கு பயன்படுத்தியுள்ளார்

சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடான இந்த வேளையில் இவ்வாறான பித்தலாட்டக்காரர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம். இவ்வாறானவர்கள் உள்ளூர் உற்பத்தி, வேலைவாய்ப்பு இளைஞர்களின் எதிர்காலம் என கருசனையாக கதைத்து தங்களை மிகச்சிறந்த உற்பத்தியாளர்கள் என அப்பாவிகளின் மண்டையைக் கழுவி காரியத்தை சாதித்துவிடுவார்கள்.

சாதாரண ஒரு சிறுவர்கள் ஏறியாடும் ஊஞ்சால்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்துவிட்டு அதனை டொலர்களில் விற்க முற்பட்டுள்ளார்கள் .
இவர்கள் இந்தப் பொருட்களை இலங்கையில் டொலர்களில் வாங்குகின்றார்களா?? அல்லது தங்களிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு டொலர்களில் சம்பளம் கொடுக்கின்றார்களா?
இவ்வாறான விசுக்கோத்துகள் செய்யும் வேலைகளைப் பார்த்து யாழ்ப்பாணத்தில் உள்ள வேறு சில இவர்களைப் போல விசுக்கோத்துகளும் டொலர்களில் கேட்க முற்பட்டால் சனத்தின் நிலைதான் என்ன?

வம்பன்….