Vampan memesபுதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயரும் அன்ரிகளால் பெரும் தொல்லையாம்!!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தலைநகர் கொழும்பில் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் வசிக்கும் மக்கள் சொல்ல முடியாத அவஸ்தைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் பெரும் வளவுகளுடன் பெரிய வீடுகளில் வசித்து வந்த செல்வச் செழிப்பு மிக்கவர்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த யுத்த நடவடிக்கைகளால் கொழும்பில் சென்று வசிக்கத் தொடங்கினார்கள். வேலை நிமிர்த்தம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக கொழும்பில் தங்கியிருப்பவர்களைத் தவிர யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் அங்கேயே அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் வீடுகளை சொந்தமாக வாங்கி நிரந்தரமாக குடியேறினார்கள். அவர்களின் பிள்ளைகளை அல்லது கணவன்மாரை வெளிநாடு அனுப்பிவிட்டு அவர்கள் அனுப்பும் பணத்தில் சொகு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போது கொழும்பில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தங்கத் தொடங்கியுள்ளார்கள். அவர்களில் பலர் தீவகத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக கணவன்இ பிள்ளைகள் வெளிநாடுகளில் வசித்து வரும்போது தனது அக்கா மகள் அல்லது அண்ணன் மகளுடன் கொழும்பில் வசித்து வந்த 50 வயதைத் தாண்டிய அன்ரிகள் பலர் தற்போது யாழ்ப்பாணத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தங்களின் வீடுகளில் வாடகைக்கு வசித்து வந்தவர்களை அகற்றுவதற்காக பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்களாம்.

குறிப்பாக 3 மாத அவகாசம் கொடுத்தே வாடகைக் குடியிருப்பாளர்களை வீட்டிலிருந்து அகற்ற முடியும். கொழும்பில் வசிப்பவர்களில் பலர் வாடகைக்கு வீட்டை கொடுத்த பின் தாம் வந்து தங்குவதற்கு என ஒரு அறையை அந்த வீட்டில் எடுத்து வைத்திருப்பார்கள். இவ்வாறான அறைகளை வைத்திருந்து தற்போது தனது வீட்டில் வாடகைக் குடியிருப்பாளர்களுடன் தங்கியுள்ள அன்ரிகள் பலர் வாடகை குடியிருப்பாளர்களை அகற்றுவதற்கு அவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றார்களாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறான ஒரு வாடகை குடியிருப்பாளர் மீது ஒரு அன்ரி பொலிசில் புகார் கொடுத்துள்ளார். எவ்வாறான புகார் என்றால் தான் குளிக்கும் போது குளியலறையை குறித்த வீட்டில் குடியிருந்த குடும்பஸ்தர் எட்டிப் பார்த்தார் என்பதே. இவ்வளவுக்கும் அந்த அன்ரிக்கு 57 வயது என பொலிஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குடும்பஸ்தர் மற்றும் அவரின் மனைவிஇ பிள்ளைகள் போன்றவர்கள் பொலிசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் அன்ரி வீட்டுக்கு வந்தவுடன் தம்மை எழுப்பு:வதற்கு 4 நாள் அவகாசம் தந்ததாகவும் ஆனால் வாடகை ஒப்பந்தப்படி 3 மாதம் இருப்பதாகவும் அதற்குள் நாம் எழும்புவோம் என கூறிய போது அன்ரி கடும் வார்த்தைகளால் தம்மை திட்டிதீர்த்து வந்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன் 41 வயதான தமது தந்தை இவ்வாறான செயற்பாட்டை செய்யவில்லை எனவும் வேண்டுமென்றே அன்ரி இவ்வாறு முறையிட்டுள்ளதாகவும் குறிபிட்டுள்ளனர்இ

இதே வடிவத்தில் இன்னொரு அன்ரியும் அதே பொலிஸ் நிலையத்தில் தன்னை வீட்டில் தங்கியுள்ள குடும்பஸ்தர் தவறான முறையில் இரவில் தடவுகின்றார் என முறையிட்டுள்ளார். இது தொடர்பாகவும் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது வாடகை வீட்டிலிருந்து எழும்பச் சொன்ன அதே காரணத்தையே குறித்த குடும்பஸ்தரின் உறவுகள் கூறியுள்ளார்கள். அன்ரிமார்களின் திருவிளையாடல்களால் பொலிசார் பெரும் விசனத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.