புதினங்களின் சங்கமம்

எரிபொருள் விலையேற்றத்தால் கொதித்தெழுந்து ஆத்திரத்தின் உச்சக் கட்டத்தில் வீதிகளில் மக்கள் செய்யும் செயற்பாடுகளின் தொகுப்பு இதோ!!!(Photos)

எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹிங்குராங்கொடை, பத்தேகம, திகன, காலி, மாதம்பே, கம்பளை, கண்டி, கேகாலை மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ரயில் மார்க்கத்தை மறித்து ரம்புக்கனை நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கையினால் குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரம்புக்கனை – மாவனெல்ல, ரம்புக்கனை – கேகாலை, ரம்புக்கனை – குருணாகல் வீதிகளை மறித்தும் ரம்புக்கனை நகரில் தற்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, ரம்புக்கனை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மறித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, அனுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் கண்டி – மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளது
இதேவேளை காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

May be an image of 5 people and outdoorsMay be an image of 6 people, tree and outdoorsMay be an image of 2 people, people standing, train, outdoors and text that says "Shot on OnePlus van"May be an image of 2 people, people standing and streetMay be an image of streetMay be an image of 7 people, people standing and roadMay be an image of 3 people, street and roadMay be an image of 6 people, fire and roadMay be an image of outdoorsMay be an image of 8 people and railwayMay be an image of 1 person, walking, standing, motorcycle, road, crowd and treeMay be an image of one or more people, people standing, road, crowd and tree