யாழ்ப்பாணத்தில் 24 வயது இளைஞன், பாடசாலை பெண் அதிபர் உட்பட 3 பேர் கொரோனாவால் மரணம்!!
யாழ்ப்பாணத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர், பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 24 வயதுடைய எட்மன் ஜெரன்ஸ் என்பவர், மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 68 வயதுடைய V.சின்னப்பிள்ளை ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை,
யாழ்ப்பாணம் கோண்டாவில் இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் செல்வி பா.மார்க்கண்டு என்பவரும் உயிரிழந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.