புதினங்களின் சங்கமம்

அமைச்சரின் வீட்டுக்குள் நுழைந்து பொதுமக்கள் அதிரடித் தாக்குதல்!

பொலன்னறுவையிலுள்ள இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் இல்லத்தில் இன்று இரவு சுமார் 300 பேர் அத்துமீறி நுழைந்துள்ளதுடன், குறித்த குழுவினர் வீட்டிற்கு சிறு சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் பொலன்னறுவை அலுவலகத்தை தண்ணீர் போத்தல்களால் தாக்கிய பின்னர் பண்டிவெவில் உள்ள அமைச்சரின் வீட்டிற்கு பேரணியாக சென்றுள்ளனர்.

அமைச்சரின் வீட்டில் கலவரக்காரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும், வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் வீட்டில் இருந்தாரா என்பது குறித்து எந்த தகவலும் வரவில்லை.

அந்த கும்பலை வீட்டை விட்டு வெளியேற்ற போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.