புதினங்களின் சங்கமம்

யாழில் மகனை பாடசாலை கொண்டு செல்லும் போது ஆட்டோக்காரனால் இடித்துக் கொல்லப்பட்ட தாய்!! தப்பி ஓடிய ஆட்டோகாரனை தேடுகின்றது பொலிஸ்!!

பள்ளியில் மகனுக்கு உணவளித்துவர மோட்டார் சைக்கிளில் சென்ற தாயை முட்டித்தள்ளி வீழ்த்திவிட்டு, தப்பியோடிய முச்சக்கர வண்டி சாரதி! 3 நாட்களின் பின்னர் தாயார் உயிரிழப்பு!
விபத்து ஏற்படுவது தற்செயலானது, ஆனால் இன்று விபத்தை ஏற்படுத்துவதற்கென்ரே ஓட்டுகிறார்கள்!
சிலரின் கவனயீனம் பல குடும்பத்தைச் சிதைத்து விடுகிறது. மூன்று பிள்ளைகளை நாதியற்றவர்களாக்கிக்கி விட்டுள்ள விபத்து.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி குறித்த தகவல் தருமாறு சாவகச்சேரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்து காணப்பட்ட அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரச் சென்றபோதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தால் உயிரிழந்தவர் மீசாலை வடக்கினைச் சேர்ந்த சிறீதரன் செல்வராணி (வயது 52) உடையவராவார்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி குறித்த தகவல் தருமாறு சாவகச்சேரி பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.