மார்ச்-14 முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
மார்ச்-14 முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா புதிய சுற்றறிக்கையின் ஊடாக அறிவித்துள்ளார்.
கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகளை நடாத்திச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டால் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கை எடுக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
