ஜோதிடம்

இன்றைய இராசிபலன் (24.05.2019)

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். பிரபலங்கள்உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக்கிடந்த பணிகளை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப்போராட்டங்கள் ஓயும். குடும்பத்தில்அமைதி திரும்பும்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதிய சலுகை
கள் கிடைக்கும். உற்சாகமான நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மறதியால் விலை உயர்ந்தப்பொருட்களை இழக்க நேரிடும். வியா பாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்து செல்ல வேண்டிய நாள்.

கடகம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். சகோதர வகையில் உதவிகள்கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோ சனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில்ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில்
மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில்புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்
திறமை வெளிப்படும். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

துலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயா ருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள்கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் விமர் சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உயர்வு பெறும் நாள்.

விருச்சிகம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு: கடந்த இரண்டுநாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்
போர் வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில்போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: நீண்ட நாள் ஆசை யில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.