புதினங்களின் சங்கமம்

யாழ் நெல்லியடி விபத்தில் இரண்டாகப் பிளந்த மோட்டார் சைக்கிள்!! 18 வயது இளைஞன் பலி! (Photos)

வடமராட்சி வதிரி மத்திய மகளிர் கல்லூரியின் முன்பாக இடம் பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வதிரி – மாலைசந்தை வீதியில் மாலைசந்தை நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், வதிரி சந்தி நோக்கி சென்றுகொண்டிருந்த ஆர்பிகோ நிறுவனத்தின் லொறியும் மோதி விபத்திற்குள்ளாகின.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்து, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மரணமடைந்துள்ளார்.

துன்னாலை மேற்கு, சம்புசம்பாதி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனே உயிரிழந்தார்.

<

தற்போது குறித்த கிராம மக்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை வளாகத்தில் ஒன்றுகூடியுள்ளனர். அந்த பகுதி அழுகுரலால் நிறைந்துள்ளது.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of motorcycle and outdoors

May be an image of motorcycle and outdoors

May be an image of 5 people and road