பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த இராணுவ சிப்பாய் கைது!
ஹிரிபிட்டியாவ பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சியின்போது கல்நேவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் கையை கடித்து காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, விளையாட்டு அரங்குக்கு வெளியே இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்றவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பொலிஸ் அதிகாரி கல்நேவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய், பொலிஸ் பாதுகாப்புடன் அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அரலகன்வில இராணுவ முகாமில் பீரங்கி படைப் பிரிவில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
