புதினங்களின் சங்கமம்

யாழ் ஆரியகுளம் பகுதி விபத்தில் அரச ஊழியர் நிருபன் பலி!! இன்று அதிகாலை நடந்த சம்பவம்!! (Photos)

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை – அல்வாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக  பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் இன்று அதிகாலை சென்ற சமயம்

குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது நின்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் வயது 32 என்ற இளைஞரே பரிதாபமாக உரிரிழந்தவர் ஆவார்

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.No photo description available.

May be an image of scooter, motorcycle and roadMay be an image of 1 person and text that says "துயர்பகிர்கிறோம்... துயர்பகிர் அமரர். இந்திரசிங்கம் நிருபன் மன்னில்:25.01.1989 வின்னில் 08.02.2022 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவனை பிரார்த்திக்கின்றோம். தங்கள் பிரிவால் துயருறும் கலைமகள் விளையாட்டுகழக நண்பர்கள் ஓம் சாந்தி சாந்தி சாந்தி! ANTH"