புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பெற்றோலில் கலப்படமா?? ஒரு லீற்றர் பெற்றோலில் 50 கி.மீ ஓடிய மோட்டார் சைக்கிள்கள் இப்போது 40 கி.மீ மட்டுமே ஓடுகின்றது!! பரபரப்புத் தகவல்கள் இதோ!!

பெற்றோல் ஒரு மாதத்திற்க்கு முன்னர் 1லீட்டரில் 50 கிலோமீட்டர் ஓடின வாகணம் இப்போது 40 அல்லது 35ல் முடிவடைந்து விடுகின்றது…
இது பற்றி ஊடகங்களிலிலும்
92, 95 ஒக்டேன் பெற்றோலின் தரம் தொடர்பில் சோதனை முன்னெடுப்பு…!
95 ஒக்டேன் மற்றும் 92 ஒக்டேன் பெற்றோலின் கலவையில் மாற்றம் உள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
எரிபொருள் நுகர்வு தொடர்பில் பொது மக்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் செயலாளரான கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அமைந்துள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து 62 மாதிரிகள் பெறப்பட்ட தாகவும், எரிபொருள் தேவையான தரத்தை பூர்த்தி செய்ததை சோதனைகள் உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், அதிகரித்து வரும் பொதுமக்களின் முறைப் பாடுகளைக் கருத்திற் கொண்டு, புதிய மாதிரிகளில் மேலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 92 ஒக்டேன் பெற்றோலுடன் 95 ஒக்டேன் பெற்றோலைக் கலப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.