யாழ் கடலில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்பு! இந்திய இழுவை படகுகள் மூழ்கடித்ததா..?
இருவரில் ஒருவரின் சடலம் நண்பகல் கரையொதுங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக குறித்த மீனவர்கள் பயணித்த படகின் எச்சங்கள்
கடலில் மிதந்த நிலையில் அதில் பயணித்த மீனவர்கள் இருவரும் தேடப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறலுடன் யாழ்ப்பாணம் மீனவர்களை கொலை செய்யும் முயற்சிகளும் ஆங்காங்கே இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

