புதினங்களின் சங்கமம்

கொழும்பில் நல்ல உத்தியோகத்திலிருப்பதாக வீட்டில் தெரிவித்துவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது!

>கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்து அதன் முகாமையாளர் உட்பட பத்து பெண்களை கைது செய்துள்ளனர்.

இதன் முகாமையாளர் கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர். ஏனைய பெண்கள் 27, 32, 33, 41, 42 மற்றும் 52 வயதுடைய அத்திடிய, களனி, ஓபநாயக்க, கொகரெல்ல, பிலியந்தலை, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் திருமணமான பெண்களாவர்.

விபச்சார விடுதி அமைந்துள்ள கட்டிடம் மாதம் 300,000 ரூபா வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பிரதேசத்தில் தாங்கள் மிகச் சிறப்பாக தொழில் செய்து வருவதாக குறித்த பெண்கள் வீடுகளுக்குத் தெரிவித்து, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.