புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பெண் வைத்தியர் பிரியந்தினி கமலசிங்கத்தை அலங்கோலப்படுத்தியவர் யார்?? (Video)

அரச பங்காளிக் கட்சியை சேர்ந்த பிரமுகர் என்று சொல்லப்படும் ஒருவரால் கண்டாவளை பிரதேச வைத்தியசாலை வைத்தியர் Dr.Priyaanthini Kamalasingam க்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது அதற்கான குரல் பதிவு ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.
இன்று நீதிமன்றில் விடயத்தை கொண்டு செல்வதாக கூறினார்.
மருத்துவரின் துணிவிற்கும் செயலுக்கும் வாழ்த்துக்கள்.
உரிய தரப்புக்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அச்சுறுத்தல் விடுத்தவர்கள் யாராகினும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சமீபத்தில் தருமபுரத்தில் இடம்பெற்ற மாபெரும் கண்மருத்துவ கொள்ளையினை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகாத வார்த்தைகளால் பேசும் இன்னொரு வைத்தியரின் தம்பியும் ஒரு அரச சார்பு கட்சியின் உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன்…
இந்த காணொளியை செவிமடுக்கும் போது வடக்கின் மருத்துவ கட்டமைப்புக்குள் எவ்வளவு தூரம் அரசியல் உள்நுழைந்து விளையாடுகிறதென்பதை அறிய முடியும்.
வைத்திய அதிகாரியை மிரட்டும் குறித்த நபர் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தேர்தலில் சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட ஒரு சாதாரண நபர். அவருக்கு அப்பகுதி மக்களே வாக்களிக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நபர் மக்களுக்கு சேவையாற்றும் ஒரு மருத்துவ அதிகாரியைப்பார்த்து அடிப்பன், உடைப்பன், மூஞ்சையை கிழிப்பன் என்றெல்லாம் பேசுவதும் தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வைத்து வேலையை விட்டு கலைப்பன் என்றெல்லாம் சவால் விடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
இதில் இன்னுமொரு கேவலமும் உண்டு குறித்த பெண் மருத்துவர் துணிச்சலாக நீ யார் என்னை கேள்வி கேட்க என்று அந்நபரிடம் கேட்கிறார் ஆனால் அவருக்கு மேல் அதிகாரியான கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி( RDHS)குறித்த அந்த அரசியல் இடைத்தரகரான நபரிடம் தனக்கு கீழ் பணியாற்றும் MOH பற்றி முறைப்பாடு செய்ததாக அந்த நபரே கூறுகிறார். படித்து பட்டம் பெற்ற ஒரு RDHS அவரின் பதவியின் மதிப்புக்கூட தெரியாமல் ஒரு பிரதேச சபை மெம்பராக கூட இல்லாத ஒரு நபரிடம் MOH ஐ மாற்ற அரசியல் பலத்தை காட்டச்சொல்லி சொல்லியிருக்கிறார் என்கிறபோது அவரின் பதவிக்கு என்ன மதிப்பிருக்கிறது? இப்படி தற்துணிவற்ற அவர் கீழ்த்தர அரசியலூடாக சாதிக்க நினைக்கும் அவர் வைத்திய அதிகாரியாக இருந்து மக்களுக்கு சேவை செய்வார் என்று எப்படி நம்ப முடியும்?
குறித்த கண்டாவளை M.O.H அதிகாரிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவனின் செக்கரட்டி கோல் எடுத்ததாகவும் M.O.H ஆன்சர் பண்ணவில்லையென்றும் நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா என்று குறித்த அரசியல் அல்லக்கையான கோபாலகிருஷ்ணன் கேட்கிறார். சுரேன் ராகவன் மக்கள் வாக்குகளால் தெரிவுசெய்யப்படாது ஒரு எடுபிடி எம்.பி அவருக்கே இங்கு மரியாதை கொடுக்க அவசியம் இல்லை அவரின் செக்கரட்டி செவ்வேளுக்கு ஏன் பயந்தடித்து பதில் சொல்லவேண்டும்?
கிளிநொச்சி மக்கள் தமக்கென ஏகோபித்த மக்கள் ஆதரவோடு #சிறீதரன் அவர்களை பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளனர். M.S Mathiaparanan Abraham Sumanthiran அவர்களுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பி உள்ளனர். இந்த மாவட்டத்திற்கு தொடர்பே இல்லாத யாரோ ஒருவர் நியமித்த பாராளுமன்ற உறுப்பினரின் செக்கரட்டியின் கதைக்கெல்லாம் எங்கள் மாவட்டத்தின் வைத்திய அதிகாரி பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?
கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ளDr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார். ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார். இதுதான் இப்போது இங்கிருக்கும் அரசியல் வால்பிடி அதிகாரிகளுக்கு பிரச்சனையாக உள்ளது.
நேர்மையான அதிகாரிகளை கலைத்துவிட்டு ஊழல் வாதிகளை வைத்து எங்கள் பிரதேசத்தை நாசப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எங்கள் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்…