புதினங்களின் சங்கமம்

பொலிஸ் தடுப்பில் தற்கொலைக்கு முயன்ற நபர்? குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!!

ருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில், ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதுகுறித்து தெரியவருவது, தனது மனைவியை தாக்கிப் படுகாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அல்வாய் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், அவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று இரவு (05-01-2022) பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த நபர் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடத்தினை பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.