புதினங்களின் சங்கமம்

யாழில் சட்டத்தரணிகள் சங்கத்தலைவரின் செயற்பாட்டால் ஆசிரியர் பரிதாபகரமாகப் பலி!!

இத் தகவல் சமூகவலைத்தளத்தில் இருந்து பிரதிசெய்யப்பட்டதாகும்…
>யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதியில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவரும், பதில் நீதவானுமாகிய கங்காதரனின் கார் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், காரின் கதவு திடீரென திறக்கப்பட்டுள்ளது. அப்பொழுது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் மீது காரின் கதவு மோதி வீதியில் விழுந்துள்ளார். பின்னால் வந்த பேருந்து முதியவர் மீது மோதியுள்ளது.