புதினங்களின் சங்கமம்

நடு வீதியில் சிறுவனை கத்தியால் குத்தி தொலைபேசி பறிப்பு: யாழில் சம்பவம்!

>யாழில் வீதியால் சென்ற சிறுவனை கத்தியால் குத்தி, தொலைபேசியை பறித்து சென்ற திருடர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, தாவடி பகுதியில் நேற்று (25) இந்த சம்பவம் நடந்தது.

மருதனார் பகுதியை சேர்ந்த 16 வயதான இளைஞன் ஒருவர் தொலைபேசியில் பேசியபடி, துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவனை கத்தியால் குத்தி, தொலைபேசியை திருடிச் சென்றுள்ளனர்.