பலரது கண்ணைப் பறித்த டொக்டர் மலரவனின் திருவிளையாடல் நாளை யாழ் போதனாவைத்தியசாலையில்!!
யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவிற்குள் வெசாக் கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
எதிர்வரும் 21, 22ம் திகதிகளில் போதனா வைத்தியாலையில் கண் சிகிச்சை பிரிவிற்குள் பௌத்த
பிக்குகள் பிரித் ஓதி வெசாக் நிகழ்வுகளை அனுட்டிக்கவுள்ளனர். போதனா வைத்தியசாலையின் கண்
சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மலரவன் இதற்கான ஏற்பாட்டை செய்ததாக வைத்தியர்கள்
குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில், விடுதிக்குள் இப்படியான நிகழ்வு இதுவரை
நடந்ததில்லை, இது நோயாளர்களையும் அசௌகரியப்படுத்தும் என குறிப்பிட்டு, அரச வைத்திய
அதிகாரிகள் சங்கம் தனது எதிர்ப்பை கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பெரும்பாலானவர்கள் இதை கூட்டாக எதிர்த்துள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை அங்கத்தவர்கள், வைத்தியர்
மலரவனுடன் இது குறித்து பேச்சு நடத்தியபோதும், நிகழ்வை கைவிட அவர் மறுத்து விட்டதாக
வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு வைத்தியசாலை பணிப்பாளர் எந்த அடிப்படையில் அனுமதியளித்தார் என சமூக
ஊடகங்களில் கேள்வியெழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் தன்னை நல்லவனாகக் காட்டிக் கொண்டு அரசாங்கத்திற்கு வால் பிடித்து பல கேவலங்களைப் புரிந்தது வருகின்றார். இது தொடர்பான விரிவான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்.
இதே வேளை யாழ் நோதேர்ன் தனியார் வைத்தியசாலையில் 9 பேரின் கண்களைக் குருடாக்கிய மலரவனைக் காப்பாற்றிய அரசாங்கத்திற்கு நன்றி விசுவாசத்தைக் காட்டவே மலரவன் இவ்வாறான வேலையைச் செய்வதாகவும் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
மலரவனால் பாதிக்கப்பட்ட தாயொருவரின் மகனின் குமுறல் இது….
பலரின் கண்களைக் குருடாக்கிய பின்னர் மலவரன் டொக்டர் தனது அந்தப்புர அழகிகளுடன் கொண்டாடிய பிறந்தநாள்…..
g