புதினங்களின் சங்கமம்

பட்டப்பகலில் பலாலி வீதியில் ஆரியகுள பகுதியில் சிறுநீர் கழிப்பவர் யார்?? உங்கள் கருத்துக்கள் என்ன?(Photos)

எவ்வாறான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!
பட்டப்பகலில் சன நடமாட்டம் கூடிய பலாலி வீதியில் ஆரியகுள பகுதியில் ஒருவர் இவ்வாறு சிறுநீர் கழித்துவிட்டு செல்கிறார்.
பொது இடங்களில் குப்பை கொட்டுவது, துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றிற்கு தண்டப்பணம் அறவிட மாநகர சபைக்கு முழு அதிகாரமும் உண்டு. அந்த அதிகாரத்தை சரிவர பயன்படுத்த எண்ணிய மாநகர முதல்வர் மணிவண்ணன் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாய்ந்து கைதுசெய்யப்பட்டார்
இருக்கும் சொற்ப அதிகாரத்தை கூட சரிவர பயன்படுத்த முடியாத நிலையில் மாநகர சபை இருக்க, மாநகர சபை கல்லுண்டா வெளியில் குப்பை கொட்டுவதாக காங்கிரஸ் எம்பி கயேந்திரன் பாராளுமன்றில் முறையிடுகிறார். இது இருக்கும் சொற்ப அதிகாரத்தையும் மத்திக்கு பறித்துக் கொடுக்கும் செயற்பாடாகவே பார்க்க முடிகிறது.
மாநகரம் அழகாக வேண்டும் என்றால் மாநகர சபை தனது முழு அதிகாரத்தையும் சரிவர பயன்படுத்த வேண்டும். இவ்வாறானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.