தமிழக சாரதி அனுமதிப்பத்திரம் யாழில் கரையொதுங்கியது!
இந்தியாவைச் சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம் என்பவருடைய சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
மீட்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு என்ன நடந்தது, சாரதி அனுமதிப்பத்திரம் எப்படி இங்குவந்து கரையொதுங்கியது போன்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை நாட்களாக வடமராட்சி, வடமராட்சி கிழக்குப் பகுதிகள் உள்ளிட்ட யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் 6 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன.
கரையொதுங்கிய சாரதி அனுமதி பத்திரத்தில் தமிழகத்தின்
காலம்பாடி,
சிதம்பரம், என முகவரியிடப்பட்டுள்ளது.
அந்த முகவரி-
Kalampadi po
Chidambaram taluk
Chidambaram cuddalcre tn 606602

