தென்மராட்சியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்திற்கு உட்பட்ட வேம்பிராய் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வேம்பிராய் பகுதியில் தனியார் காணி ஒன்றில் காணப்பட்ட குறித்த வெடிபொருட்களை அவதானித்த காணி உரிமையாளர் பொலிஸார் ஊடாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து அங்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
