யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய காவாலிகள்! ஒருவர் காயம், 3 காவாலிகளை சுற்றிவளைத்துப் பிடித்த பொலிஸா
யாழ்.கோண்டாவில் – செபஸ்த்தியன் வீதி பகுதியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று முன்தினமிரவு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் மதுபோதையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
சம்பவத்தையடுத்து ஒரு மோட்டார் சைக்கிள் தப்பி சென்றபோதும் மற்றய மோட்டார் சைக்கிளையும் வன்முறையில் ஈடுபட்ட 3 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

