புதினங்களின் சங்கமம்

யாழ்.தனங்கிளப்பு பகுதியில் கோர விபத்து..! 6 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சாவகச்சோி – தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் வாகனமும்,

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன.

சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.