‘கணவனுடன் சண்டை‘ – இத்தாலியில் இரு குழந்தைகளும் கொன்றுவிட்டு காணாமல் போன இலங்கை பெண்! சடலமாக மீட்பு! (Video)
இரு குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்த இலங்கைப் பெண்!இத்தாலியில் நடந்த துயரச் சம்பவம் கணவன்-மனைவி இடையிலான பிணக்குகளில் குழந்தைகள் பலியிடப்படுகின்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு ஆற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இத்தாலியின் வடக்கு வெனெற்றோ
பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட் டுள்ளன.சபாடி(Sabadi) மற்றும் சந்தனி (Sandani) ஆகிய பெயர்கள் கொண்ட 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்கள் வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்டுள்ளன. இருவரும் மூச்சுத் திணறலால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சடலங்கள் கிடந்த அறையில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை. குழந்தைகள் இருவரும் தலையணை மூலம் மூச்சிழக் கும் வரை அழுத்திக் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

