மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
இளம் தம்பதியினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, கடந்த 2ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்தது.
கடுமையான எரிகாயங்களிற்குள்ளான 22 வயதான மனைவி, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூரத்தில் ஈடுபட்ட 26 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.







