பல்சுவை செய்திகள்

கனடாவில் கலியாணம் கட்டிய தமிழ் யுவதிகளுக்கு ஆண், பெண் உறுப்புக்கள் இரண்டும் சேர்ந்து உள்ளதா?? பிரியா நடேசன் கூறுவது என்ன?

இவர்கள் பற்றிய அறியாமையின் விளைவுகள் பலரது பதிவுகளில் பார்வையிட முடிந்தது.
LGBTQIA Community
மூன்றாம் பாலினத்தவர் புதுமைப்பாலினத்தவர்
இவ்வாறு பல பெயர்கள் இருந்தாலும் கூட எமது சமூகம் சில இழிவான வார்த்தைகளையை சொல்லி இவர்களை அழைப்பது வேதனைக்குரிய விடயமே
ஒரே நாளில் இவர்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் ஏற்பட்டு விடாது. இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை உண்டு என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சரி அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்ற தெளிவும் அவர்களுக்கு இருக்கும். அப்படி இருக்கையில் வெறும் பாலியல் சார்ந்த பார்வையில் மட்டும் பார்ப்பதனை விட்டு விட வேண்டும்.
உங்களிடம் யாரேனும் வந்து அந்த மாதிரியான கேள்விகளை கேட்டால் உங்களது மனநிலை எப்படி இருக்குமோ அது போலத்தான் அவர்களுக்கும் என்பதனை உணர வேண்டும்.
பாலியல் சார்ந்த அறிவு மற்றும் மூன்றாம் பாலினத்தவர் சார்ந்த அறிவு மாத்திரமே இதற்கான சரியான தீர்வாக அமையும்.
எமது சமூகத்தவர்களுக்கு அது பற்றிய புரிதல் இல்லாமையே அவர்களை கேலி செய்யவும் துன்புறுத்தும் வகையில் பேசவும் காரணமாக உள்ளது.
பிறப்பிலே ஆண் ஆக பிறந்தாலும் பலருக்கு தான் பெண் என்ற உணர்வே அதிகமாக காணப்படும் இவர்கள் திருநங்கை Transgender என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு பெண்கள் மீது காதலோ காமமோ (Girl To Girl) தோன்றுவதில்லை. ஆண்கள் மீதே காதல் அல்லது உணர்வுகள் ஏற்படுவதனால் அவர்கள் பெண்கள் போலவே வாழ ஆசைப்படுகிறார்கள். சிலர் அதற்கான சத்திரசிகிச்சையினை மேற்கொண்டு முழுமையாக மாறியும் திருமணம் செய்து வாழ்ந்தும் வருகிறார்கள்.
பிறப்பிலே பெண்ணாக பிறந்தாலும் ஆண் போன்றே உணரப்படுபவர்கள் தான் திருநம்பி எனப்படுபவர்கள் இவர்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு வராது பெண்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பு காரணமாக அவர்கள் பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்களும் சத்திரசிகிச்சை மேற்கொண்டும் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.
லெஸ்பியன் Lesbian எனப்படுபவர்கள் தன்பால் ஈர்ப்புக் கொண்டவர்கள் அவர்களால் பெண்ணாக இருந்து பெண்களோடு மாத்திரமே உறவு கொள்ள முடியும். அவர்களும் பெண் என்ற அடையாளத்தை மாற்றாது அப்படியே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களோடு உறவில் ஈடுபடுகிறார்கள்.
கே gay எனப்படுபர்கள் ஆண்களோடு ஆண்கள் மாத்திரம் உறவு கொள்வதை குறிக்கும்
பைசெக்சுவல் Bysexual என்பது ஆணோடும் பெண்ணோடும் இரு பாலினத்தவர்களோடும் உறவில் ஈடுபடக்கூடியவர்கள்
ஈரிலிங்கத்தினர்கள் என்பவர்கள் பிறப்பிலேயே ஆண்குறி மற்றும் பெண்குறிகளுடன் சேர்ந்து பிறப்பார்கள். இதிலே ஓர் அங்கத்தை நீக்கிவிட்டு அவர்களால் அவர்கள் நினைத்த பால் இனத்தில் வாழ முடியும். அவர்கள் பெண்களாக வாழ விரும்பினால் பெண்களாகவே வாழ முடியும் ஆண்களாக வாழ விரும்பினால் ஆண்களாகவே வாழ முடியும்.
இவை பற்றிய இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. முடிந்தால் அவற்றை தேடிப்படியுங்கள்.
Thankyou