கனடா தமிழ்யுவதிகளின் கலியாணம்!! இனனொரு இலங்கைத் தமிழ் வைத்தியரின் மாறுபட்ட கருத்து இதோ!!
தமிழ்ப் பெண்கள் – ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் !
பரபரப்பான சமூக வலைத்தளங்கள்…
Dr சிவஞானம் சிவச்சந்திரன்
தனது FB யில் பதிவிட்டுள்ள கருத்து:
புலம்பெயர் நாட்டில் இரு பெண்கள் திருமணம் முடித்துள்ளார்கள். புகைப்படத்தைப் பார்க்க தமிழ் பெண்கள் போல உள்ளார்கள்.
இதை வழமை போல் நம்மவர்கள் கேலி பண்ண தொடங்கி விட்டார்கள்.
இது மேலைத்தேய நாடுகளில் சட்ட ரீதியானது.
அவர்கள் குழந்தைகூட பெற்றுக்கொள்ள முடியும்.
ஒரு ஆணின் விந்தணுக்களை தானமாக பெற்று செயற்கை பரிசோதனைக்குழாய் மூலமாக கருக்கட்டல் செய்து இவர்கள் அந்த கர்ப்பத்தைச் சுமந்து பிள்ளை பெறலாம்.
திருமணம் முடித்த இரு ஓரினச் சேர்க்கையாளர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது இங்கே சாதாரணம். ஒரு தடவை அப்படித் திருமணமான இரு ஆண்களின் வாடகைத் தாய்க்கு மூன்று குழந்தைகள் ஒன்றாக பிறந்தது. அந்த மூன்று குழந்தைகளையும் அந்த இரு ஆண்களும்தான் அம்மா அப்பாவாக இருந்து வளர்க்கிறார்கள்.
நான்கூட ஒருகாலத்தில் இப்படிப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களால் எப்படி குழந்தைகளை வளர்க்க முடியும் என்றெல்லாம் எழுதியுள்ளேன்.
அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவை இல்லை.
அது அவர்களின் உரிமை, அதில் நாம் மூக்கை நுழைக்க முடியாது.
ஒரு உண்மையைச் சொல்லவா?
இன்று அந்த போட்டோக்களைப் பகிர்ந்து பகிடி பண்ணுபவர்களில் பலர் ஒருதடவையாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு இருப்பார்கள். அந்தளவுக்கு வெளியில் தெரியாமல் ஓரினச் சேர்க்கை நம் சமூகத்தில் உள்ளது.
அட ஏன், பல கடவுள்களே ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று தெரியுமா உங்களுக்கு?
சரி, ஏன் இதை எழுதுகிறேன்?
சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒரு விடயத்தை இருவர் செய்யும்போது, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேலி செய்வது தவறு.
உலகம் எப்படி மாறுகிறது என புரியாமல் கிணற்றுத் தவளையாக இருப்பது உங்கள் பிழை.
இலங்கையில் ஓரினச்சேர்க்கை எப்போதும் அங்கீகரிக்கப்படாது.
ஒரு பிரதமர் ஓரினச்சேர்க்கையாளராக இருந்ததால், பாராளுமன்றில் அவரை கேலி செய்யும் நாட்டில் இருக்கும் அதிஸ்டசாலிகள் நீங்கள். அப்படிப்பட்ட உங்கள் நாட்டில் ஓரினச் சேர்க்கை எப்போதும் வராது. அதனால் நீங்கள் மற்ற நாடுகளில் நடப்பதைப் பார்த்துப் பதட்டப்பட தேவையில்லை.

