புதினங்களின் சங்கமம்

அழகிய சிங்கள மனைவியை கணவர் எதற்காக சுட்டுக் கொன்றார் ??

குடும்பத்தகராற்றினால் விபரீதம் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன். கடந்த 26 ம் திகதி) .30 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது..
123, 5 வது லேன், கரதமண்டிய, எம்பிலிபிட்டிய புதிய நகரப்பகுதியில் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தாயான இந்திரா மல்காந்தி (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவிக்கிடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
சம்பவ தினம் தம்பதியினருக்கிடையில் தகராறு ஏற்பட்டதையடுத்து, மனைவி தொலைபேசியின் மூலம் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து கணவர் தகராறு செய்வதாகவும்,
தன்னை கொல்லப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி அந்த வீட்டுக்கு வந்ததும், தனது ஒரு வயது குழந்தையுடன் தாயார் வீட்டை விட்டு வெளியேறிய போது, குழந்தையை விட்டு விட்டு வெளியேறுமாறு சச்சரவில் ஈடுபட்டு வந்த கணவர், வீட்டின் வெளிப்புறத்தில் மனைவியின் தலையில் துப்பாக்கியினால் சுட்டு படுகொலை செய்தார்.
சந்தேகநபரான, வீரசிங்க ஆராய்ச்சிகே தம்மிக்க குமார என்ற (அனுரா வயது 47) இவர் போலிசாரல் கைது செய்யப்பட்டார்.
அவர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
எம்பிலிப்பிடிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்…