புதினங்களின் சங்கமம்

ஏனைய மாகாணங்களை விட வடக்கில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகம்!

இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2.4 விகிதம் என்றும் வடக்கு மாகாணத்தில் 1.95 வீதமாக அந்த எண்ணிக்கை காணப்படுகிறது என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படுகிறது.

சுகாதார வழிகாட்டல்களை மக்கள் பின்பற்றாமையே இவ்வாறான பாதிப்புக்களுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.