சுவீடன் அண்ணனின் 6 கோடி ரூபா பெறுமதியான யாழ்ப்பாண வீட்டை விற்று பணத்தை ஆட்டையைப் போட்ட தம்பி!! அண்ணன் தற்கொலை முயற்சி

யாழ் வடமராட்சிப் பகுதியை சொந்த இடமாகக் கொண்டவரும் 30 வருடங்களுக்கு முன் சுவீடனில் நிரந்தரமாக குடும்பத்துடன் வசித்து வரும் குடும்பஸ்தர் ஒருவர் சுவீடனில் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர், யாழ் நெல்லியடி நகரப்பகுதிக்கு அண்மையில் பருத்தித்துறை வீதி ஓரத்தில் அமைந்துள்ள தனது மனைவியின் 16 பரப்பு காணி மற்றும் வீட்டை விற்பதற்கு தனது தம்பிக்கு கடந்த வருடம் ”அற்றோனிக் பவர்” முடித்து அனுப்பியுள்ளார். குறித்த குடும்பஸ்தர் சுவீடனில் தனது மகளுக்கு மாப்பிளை பார்த்திருந்ததாகவும் அதற்கான சீதனமான அங்கு கடன்பட்டு வீடு வாங்கியதாகவும் அந்த கடனை அடைப்பதற்காகவே தனது சீதன வீட்டை விற்க முயன்றதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையில் குடும்பஸ்தரின் தம்பியும் திருமணமானவர் என்றும் அவருக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளதாகவும் வீட்டை விற்று வரும் பணத்தில் தம்பியின் ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் தலா 15 லட்சம் வங்கியில் போடுவதாகவும் அண்ணன் ஏற்கனவே தனது தம்பிக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். தம்பியின் கைக்கு “அற்றோனிக் பவர்“ வந்து சேர்ந்ததும் தம்பி அந்த காணியையும் வீட்டையும் பருத்தித்துறையில் வசிக்கும் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு 6 கோடிரூபாவுக்கு விற்று முழுப்பணத்தையும் ஆட்டையைப் போட்டுள்ளார். அண்ணனுக்கு பணம் அனுப்பவேயில்லை எனத் தெரியவருகின்றது. வீடு விற்பனையாகி வீட்டில் பருத்தித்துறை வர்த்தகர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 2 மாதங்களின் பின்னரே அயலவர்கள் ஊடாக சுவீடன் குடும்பஸ்தருக்கு வீடு விலைப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தம்பியைத் தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசித் தொடர்பை துண்டித்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பஸ்தர் தனது உறவினர்கள் ஊடாக தம்பியை தொடர்பு கொண்ட போது தம்பி உறவினர்களையும் அச்சுறுத்தியுள்ளார். இதன் காரணமாக சுவீடன் குடும்பஸ்தர் தற்கொலைக்கு முயன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)