கள்ளக்காதலன் கூறியதால் குழந்தையைத் தாக்கிய கொடூரம்!! 15 நாள் சிறை!! வீடியோ

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய பெண்ணுக்கு, மனநல பாதிப்பு இல்லை என்பது உறுதியான நிலையில், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் – துளசி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால், துளசி ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில், துளசி தனது இரண்டாவது குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து துளசி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், துளசியை கைது செய்து, ஆந்திராவிலிருந்து விழுப்புரம் அழைத்து வந்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமாரின் தூண்டுதலின் பேரில், குழந்தையை துளசி அடித்து துன்புறுத்தி வீடியோ எடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து பிரேம்குமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் சென்னை விரைந்த நிலையில், துளசிக்கு மனநல பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, துளசியை 15 நாட்கள் கடலூர் மத்திய பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மீண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)