FEATUREDLatestசினிமா

அறிமுகமற்ற நபர்களுடன் முஸ்லீம் பெண்கள் அதீத காமம்!! பி.பி.சி செய்தி சேவை அதிர்ச்சித் தகவல்!!

முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணவனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள்.

நம்ப முடியாவிட்டாலும், உண்மை அதுதான். இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல்.

அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள், `ஹலாலா’ என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன.
படத்தின் காப்புரிமை Getty Images

ஃபரா – இது அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அல்ல. ஃபரா தனது 20 வயதுகளில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார். அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுகமானவர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர் ஆனால் அப்போதிலிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக ஃபரா தெரிவிக்கிறார்.

மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?

பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக பிபிசியின் ஆசிய சேவையிடம் ஃபரா தெரிவித்துள்ளார்.

“எனது முடியை பிடித்து தரதரவென இரண்டு அறைகளைத் தாண்டி வெளியே இழுத்துக் கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சி செய்தார்; சில சமயங்களில் அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்”
படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால் இந்த நிலை மாறும் என ஃபரா நம்பினார். ஆனால் அவர் கணவரின் நடத்தை அதைவிட மோசமாகத்தான் மாறிக் கொண்டிருந்தது குறுஞ்செய்தியின் வழியாக அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு அவரின் நடத்தை மோசமாகயிருந்தது.

யார் இந்த அண்டர்டேக்கர்?

“நான் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். அவர் தனது அலுவலகத்தில் இருந்தார். எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, `தலாக், தலாக், தலாக்`” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

இந்த விவாகரத்து முறை, பல இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது; பிரிட்டனில் இம்முறையின் மூலம் எத்தனை பெண்கள் “விவாகரத்து” பெற்றுள்ளனர் என்ற தகவல்களை அறிய வாய்ப்பில்லை.

சர்ச்சையை கிளப்பும் ஆண்குறி இருக்கை!

“அலைப்பேசி என்னிடம் இருந்தது”, அதை நான் எனது தந்தையிடம் காண்பித்தேன், அவர் உடனே “உனது திருமணம் முறிந்துவிட்டது, நீ அவரிடம் திரும்ப செல்ல முடியாது.” என்று தெரிவித்தார் என்று நடந்ததை விவரிக்கிறார் ஃபரா.

தபால் அட்டையில் மனைவியை விவாகரத்து செய்தவர் கைது

“என் மனம் சுக்குநூறாகிப் போனது. ஆனால் என்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் ஏனேன்றால் அவரை நான் மிகவும் நேசித்தேன்”

அதேபோல,தனது முன்னாள் கணவரும் அவரை விவாகரத்து செய்தது குறித்து வருத்தமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வதந்திக்கு எதிராக 17 ஆண்டுகள் போராடிய பெண்

இதனால் சர்ச்சைக்குரிய ஒரு திருமண முறையான ஹலாலாவை ஃபரா அணுக நேர்ந்தது; இந்த திருமண முறை முஸ்லிம்களில் ஒரு சிறிய குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது அவர்கள் மும்முறை தலாக்கையும் எற்றுக் கொள்கிறார்கள்.

தம்பதிகள், விவாகரத்து செய்து கொண்ட பின்னர் மீண்டும் இணைய விரும்பினால் ஹலாலா முறைதான் ஒரே வழி என்று அவர்கள் நம்பினார்கள்

ஹலாலா என்பது விவாகரத்து ஆன ஒரு பெண், முகம் தெரியாத வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாக அவருடன் இணைந்து வாழ்ந்து பின் விவாகரத்து பெறுவது. இவ்வாறு செய்தால் மட்டுமே அவரால் திரும்பவும் முதல் கணவரை திருமணம் செய்துகொள்ள முடியும்.

“பணியிடத்தில் தலையில் முக்காடு அணிவதை நிறுவனம் தடை செய்வது சட்டப்பூர்வமானது”

ஆனால் சில சமயங்களில் ஹலாலா சேவையை கோரும் பெண்கள் பெருமளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுகிறார்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்படுகிறார்கள், ஏன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த முறை பெரும்பாலான முஸ்லிம் மக்களால் வண்மையாக கண்டிக்கப்படுகிறது; மேலும் விவாகரத்து குறித்த இஸ்லாமிய சட்டத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிபிசியால் நடத்தப்பட்ட புலனாய்வில், ஹலாலா சேவைகளை வழங்கும் சில இணையதள கணக்குகள் பற்றி தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானோர், தற்காலிக திருமணங்களை செய்து கொள்வதற்கு பெண்களிடம் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வசூலிக்கின்றனர்.

`தீவிர விருப்பம்`

விவாகரத்து ஆன ஒரு பெண் 2500 பவுண்டுகளை செலுத்த வேண்டும் என்றும், அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறகு ஹலாலா திருமணம் “முழுமையடைந்த” பின் அவருக்கு விவாகரத்து வழங்கப்படும் என்றும் ஹலாலா சேவைகள் குறித்து முகநூலில் விளம்பரம் செய்த நபர் ஒருவர், பிபிசி செய்தியாளர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாத, விவாகரத்தான ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இதில் தன்னுடன் பலர் பணிபுரிவதாக அந்த நபர் தெரிவித்தார் மேலும் அதில் ஒருவர் ஹலாலா சேவை முடிந்தவுடன் ஒரு பெண்ணிற்கு விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்தார்.

லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை

ஆனால் அந்த நபர் சட்டவிரோத காரியங்களை செய்கிறார் என தெரிவிப்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. மேலும் பிபிசி இது தொடர்பாக அந்த நபரைத் தொடர்பு கொண்ட போது தான் ஹலாலா திருமண சேவைகளில் ஈடுபடவில்லை எனவும் முகநூலில் உள்ள கணக்கு, சமூகம் குறித்த ஒரு சோதனை முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவருடன் மீண்டும் இணையும் தீவிர எண்ணத்தில் இருந்த ஃபரா, ஹலாலா திருமணத்திற்கு இசையும் ஒரு நபரை தேட தொடங்கினார்.

“குடும்பங்களின் ஆதரவுடன் இதனை செய்யும் சில பெண்களை எனக்கு தெரியும். அவர்கள் இதுபோல திருமணம் செய்துகொண்டு பிறகு, அவர்கள் பல மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்” என ஃபரா தெரிவிக்கிறார்,

“அவர்கள் மசூதிக்கு செல்வார்கள். அங்கு இதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் அந்த சேவையை அளிக்கும் நபர்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் வேறு நபர்களையும் அப்பெண்ணிடம் பாலுறவு கொள்ள அனுமதிப்பார்கள்.”

விவாகரத்து குறித்து பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் கிழக்கு லண்டனில் உள்ள இஸ்லாம் ஷரியா கவுன்சில், இந்த ஹலாலா திருமணங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
Image caption கோலா ஹாசன், இஸ்லாம் ஷரியா கவுன்சில்

“இது ஒரு போலியான திருமணம், இது பணம் சம்பாதிபதற்கான வழியாகக் கருதப்படுகிறது; மேலும் பலவீனமானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்” என அந்த அமைப்பைச் சேர்ந்த கோலா ஹசன் தெரிவிக்கிறார்.

“இது மன்னிக்க முடியாத கொடுமை; ஹலாலா திருமணத்தை தவிர்க்க உதவிகளை நாடலாம் அல்லது ஆலோசனை பெறலாம். எவரையும் இந்த ஹலாலா திருமணத்தை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு, ஹலாலா திருமணம் செய்து, அதில் பல கொடுமைகளை அனுபவித்து, அதன் பிறகு தனது முதல் கணவருடன் மீண்டும் சேரும் முடிவிலிருந்து பின் வாங்கிவிட்டார் ஃபரா.

ஆனால் என்னைப் போல ஏராளமான பெண்கள், எப்படியாவது தீர்வு கிடைக்காதா என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என எச்சரிக்கிறார் ஃபரா.

“விவாகரத்து பெற்றுவிட்டு வலியை அனுபவித்து கொண்டிருக்கும் என்னை போன்றவர்களின் நிலையில் இருந்தால் ஒழிய, பெண்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது”.

“இப்போது என்னைக் கேட்டால் நான் இந்தக் காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஒருவரிடம் சேர்ந்து வாழ இன்னொருவருடன் என் உடலைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன். ஆனால் அந்த நேரத்தில், எனது முன்னாள் கணவருடன் சேர்ந்து எந்த ஒரு நடவடிக்கைக்கும் நான் தயாராகவே இருந்தேன்” என்கிறார் ஃபரா.